Saturday, March 27, 2010


கோட்லஸ் மாமி

சந்தைக்குபோட்டு வீடடை வரேக்கை நேரம்போனதால மொபைல் மாமி வீட்டுவழியால போகவேண்டியதாப்போயிற்று. மாமி வெயில் எறிச்சபடியா வீPட்டுமுத்தத்தில இருக்கிற

சினன பூந்தோட்டத்தில நின்றா. நான் வந்தது வேறை கார் என்றாலும் யாரிது எஙகடை ஆள் என்று கட்டாயம் பாத்து இருப்பா. அவை வீட்டு வாசல்ல ஒரு ஸபீட் பிறேக்

இருக்கு. அதால சிலோ பண்ணவேண்டியதாப்போச்சு. இப்பவே லோக்கல்ல இருக்கிற சொந்தங்களுக்கு ஏன் தெரிந்தவர்களுக்கும் என்னைக்கண்ட செய்தி போயிருக்கும்.

மாமி எப்பவும் கோட்லஸ் போனோடை தான் இருப்பா. ஒன்று மாறி ஒன்று என்று இங்கை இருக்கிற ஆக்களுக்கு போன் பண்ணி கதைத்துக்கொண்டு இருப்பா. அதோடை

வெளிநாட்டுக்கும் காட்ல போன்பண்ணி கதைச்சு இங்கத்தையான் செய்திகளை அங்க தொகுத்து வழங்குவா.

எங்கட சொந்ததில மாமி ஒரு முக்கியமான புள்ளிதான். அவ எண்பதுகளில சொத்தெல்லாம் வித்திட்டு புத்திசாலித்தனமா வெளிநாடு வந்திட்டா. இங்கை அவவிற்கு

பிள்ளைகள் இருந்தும் இல்லாததுபோலதான். மாமின்ர ஆய்கின தாங்காம அதுகள் கோவிச்சுகொண்டு தள்ளி தள்ளி வீடு வாங்கி போய் தப்பிட்டுதுகள்;. மாமியும்

மாமாவுந்தான் தனியா இருக்கினம். மாமா மாமிக்கு எதிர்மாறு. அப்பாவி. வீட்டில அவற்றை சொல் எடுபடாது. எல்லாம் மாமிதான்.

இங்கை இருக்கிற எங்கட சொந்தங்களின்ர இரகசியங்களையெல்லாம் மாமி எப்படியோ செய்தியா சேகரித்து மற்றவர்;களுக்கு சுவையா தொகுத்து வழங்குவா. யார் யார்

யார் யாரோடை கோவம் என்று தெரிஞ்சு அவையோட கதையப்போட்டு கதைய எடுத்திடுவா. மாமி கேள்விகேட்டு கதைபிடுங்கிறதில கொட்டிக்காரி. மாமின்ர வீட்டுக்கு

போகேக்கை தெரிந்த இரகசியங்களை சொல்லக்கூடாது என்டு முடிவெடுத்திட்டு;ப்போனாலும் கடைசில மாமிட்டை சொல்லிப்போட்டுத்தான் வரவேண்டியிருக்கும். கதைகளை

வெளிய எடுக்கிறபோது மாமி ஏதும் சாப்பிட சொல்லி தந்து தான் அன்பா இருக்கிறதா நம்பிக்கையை ஏற்படுத்திடுவா. அதுக்காக மாமி மிக்ஸர் அது இது என்று

வைத்திருப்பா. மாமின்ர திறமைகளைப்பார்த்து நாங்கள் நிறையத்தடவை மாமி ஊர்ரில புலனாய்வுத்துறையில இல்லாட்டி உளவுத்துறையில இருந்திருந்தா இயக்கத்திற்கு

பெரிய உதவியா இருந்திருக்கும் என்று நினைச்சதுண்டு.

மாமிய எதிர்த்தா கரச்சல்தான். சின்னச்சின்னதா சதித்திட்டம் தீட்டி ஆக்களை உண்டு இல்லையென்டு செய்திடுவா. அப்படி சிலபேர் வேற வேற ஊர்களுக்கு போய்

தனித்தனியா சீவிக்கினம். மாமிக்கு ஆள் பலமும் இருக்கு. அது வேறையாருமில்லை மாமி மூலமா தங்கட கோவக்காரர்ட ரகசிய கதைகளை தெரிந்;து கொள்ளுற

ஆக்கள் தான். அவையள மாமி புத்திசாலித்தனமா தன்ர கட்டுக்குள்ளை வைச்சிருப்பா. மாமி அவையள வரவேற்கேக்கை கட்டிப்பிடித்து கொஞ்சித்தான் வரவேற்பா. அதால

அவர்கள் அவவிற்கு எதிரா கதைக்கவோ ஏதும் செய்யவோ முடியாமல்போயிடும்.

அந்தக்காலத்தில ஊருல செய்யிறதுபோல மாமி இப்பவும் கம்பீரமா நிண்டு இங்கை புதுசா வந்த வேலையில்லாத அப்பாவி ஆக்களை வைச்சு வீட்டுவேலை

தோட்டவேலை என்று எல்லாம் கொஞ்சக்காசு கொடுத்து செய்துபோடுவா. இப்படித்தான் நானும் வந்த புதிசில அவவீட்டை முறிஞ்சு முறிஞ்சு புல்லுவெட்டி தோட்டவேலை

செய்தன். அப்ப மாமி அன்பா கதைச்சு கதைச்சு என்னோட கதைகளை எல்லாம் எடுத்து ;காட்டிஸ்கில ஸ்டோர் பண்ணி பக்கப்பும் எடுத்து வைச்சிட்டா. அப்படியெடுத்த

இரகசியங்கள் தான் இரண்டு வருடும் கழிச்சு எனக்கு எதிரா அவவிற்கு பயன்பட்டது. அப்ப எனக்கு வேலைகிடைச்சதால கொஞ்சம் கொஞ்சமா அவவிற்கு வேலை செய்றத

குறைச்சிட்டன். அதில அவவிற்கு கோவம். கூப்பிட்டோடை ஓடிவரவிலலை என்ற கோவத்தில எனக்கெதிரா சின்ன சின்னதா சதித்திட்டம் போட்டு செயற்படுத்தினா.

அதனால நிறைய கஸ்டங்களை அனுபவிக்கவேண்டியதாபோச்சு. அதில ஒன்டு நட்பா இருந்த பல உறவுகளை மாமி எனக்கெதிரா மாத்திவிட்டுட்டா. காசு குடுத்தாத்தான்

அவன் வீட்டுக்கே வருவான் வேலையேதும்செய்தா உடனை காசு எதிர்பார்க்கிறான் என்று செய்திபரப்பி சைச்சிருக்கிறா.

அதோட எனக்கு பேசிவந்த கல்யாணங்கள் பல குழம்பிப்போறதுக்கு மாமி தான் காரணம் என்று எனது மற்ற சொந்தங்கள் சொல்லுகினம். இனி அப்படி நடக்காம இருக்க

அடிக்கடி மாமியைபோய் பார்த்து அனுசரித்து நடக்கசொல்லி அறிவுரையும் சொல்லுகினம். இருந்தாலும் எனக்கு திரும்பிப்போய் மாமியை அரவணைத்து

நடக்கவிருப்பமில்லை. அது பிரச்சனையத்தான் தரும் என்று நம்பிறன். கொஞ்சநாள் மாமியால ஒண்டும் பிரச்சனை வர இல்லை. மாமி என்னை மறந்து

இருப்பாவோதெரியாது. ஆனால் இன்டைக்கு அந்தப்பக்கத்தால மாமிக்கு முன்னால தெரியாத மாதிரிபோனது கட்டாயம் ஏதும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்றது நான் நினைச்சது சரிதான்.

வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்தில சீட்டுக்கார சிற்றம்பலம் கதவைத்தட்டினார். சிற்றம்பலத்தார் இங்கை வெளிநாட்டில சீட்டுப்போடுற ஆள். நியாயமான மனிசன்தான் ஆனா

சரியான கறார்பேர்வழி. இப்ப என்னசெய்யிறது என்டு விளங்கவில்;லை. நான் குடுக்கவேண்டிய காசில கொஞ்சம் குறையுது. இனி சம்பளம் வரத்தான் குடுக்கலாம். என்ர கார்

பழுதாப்போனதில அதைவித்துட்டு கொஞ்சம் காசு போட்டு கொஞ்சம் பழைய காரா வாங்கினன் அதனால அந்த தேதிக்கு சிற்றம்பலத்தாருக்கு காசு குடுக்கமுடியாமல்

போச்சு. அதனால இந்தாள் போன் கூடப்பண்ணாமல் வந்து நிக்குது.

கதவைத்திறந்து "மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணை அடுத்த கிழமை நானே கொண்டுவந்து தாறன்"

என்று சொன்னன்.

அதுக்கு அவர் "என்ன புதுசா கார் வாங்கியிருக்கிறீராம் சீட்டுக்காசை அந்ததேதிக்கு குடுக்கதெரியஇல்லை என்ன மனிசனப்பா நீர்".
வெக்கமாப்போச்சு எனக்கு.

"சரி நான் வாறன். இங்கையெண்டு வரேல்லை. மார்க்கண்டு மாமிதான் சொன்னா இப்பதான் ஆள் போகுது வீட்டைபோனாப்பிடிக்கலாம்" என்று சிற்றபம்பலத்தார்

சொல்லிவிட்டு தன்ர காரை எடுத்துக்கொண்டு பொயிட்டார். மார்க்கண்டு மாமி வேறையாரும் இல்லை கோட்லஸ்; மாமியேதான். மாமி தன்ர வேலைய காட்டதொடங்கீட்டா.

சீட்டுக்கார சிற்றம்பலத்தார தூண்டி அனுப்பிவிட்டது மாமிதான். இனி கனடா லண்டன் யாழ்ப்பாணம் பிரான்ஸ் சுவிஸ் எல்லாம் நான் கார்வாங்கினதை நியுஸில

காட்டியிருப்பாங்கள். நான் சொல்லுறது மாமின்ட சற்றலைட் டீவியை.

Saturday, September 20, 2008




அம்மா அப்பா அருகில் இருந்தால்
தொலைபேசியில்
அளவாகப்பேசுகிறாய்....

வேறயென்ன? வேறயென்ன?
என்று அடிக்கடிகேட்டு
தொடர்பை துண்டிக்க நினைக்கிறாய்...

யாருமே இல்லையென்றால்
குழந்தையாய் குதுகலித்து
எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறாய்..

காச்சல் வந்தபோது
இரவெல்லாம் மிகவும் கஸ்ட்டப்பட்டேன்
துண்டு துண்டாய் ஏதேதோ கனவுகள்
பாதியிரவில் எழுந்து
உன் நினைவுகளில்
எனை நுழைத்தேன்..
வேதனை மாறி மகிழ்ச்சி
உன்னுடன் பேசவேண்டும்என
தட்டுத்தடுமாறி தொலைபேசியை
தேடி எடுத்தேன்
தற்செயலாய் நேரம்பார்த்தபோது
நீ தூங்கிக்கொண்டிருப்பாய் எனதெரிந்தது...
காத்திருக்கிறேன் எப்போது விடியும் நமக்கு என

Friday, April 11, 2008





எத்தனைநாள்
பேனாவுடன் கண்விழித்தும்
வாராத கவிதை
உண் கடைக்கண்பார்வையில்
காட்டாறாய் உடைத்ததென்று


முள்ளை முள்ளால்
ஏடுப்பதுபோல்
என் இதயத்து வலிகளைக் களையும்
மருந்தாய் வந்தாயோ?


பட்ட மரம் துளிர்விடுமா?
பாலை சோலையாகுமா?
ஆகிறதே
பெண்கள் நீங்கள்
மனது வைத்தால்....

பள்ளிக்குழந்தை போல



பள்ளிக்குழந்தை
வீடு செல்லத்துடிப்பதுபோல
எப்போது மணி ஐந்தாகும்
என காத்திருக்கிறேன்
ஓடி வந்து உனை அணைக்க

Wednesday, October 17, 2007





மேகமாய் வந்துபோகும் நினைவுகளிடையே
வெள்ளிநிலவாய் உன்னினைவு என்னுள்

Saturday, September 01, 2007

உஞ்சுக்


உஞ்சுக்


உஞ்சு இது வேறை ஒண்டுமி;ல்லை எங்கட நாயைக்கூப்பிடுறபேர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்று எனக்குத்தெரியாது. எங்கட வீட்டில இருந்த எல்லா நாய்களையும் அப்படித்தான் கூப்பிட்டோம். எங்கட முதல் உஞ்சு ஒரு கறுப்பு வெள்ளையும் கலந்த நாய். அமைதியான நாய். நான் அது குரைத்ததை அதிகம் பார்த்ததே கிடையாது. ஆனால் வளவுக்கை யாரும் வந்த அமைதியாப்போய் கடித்து வைக்கும். அதிகமா தேங்காய் பிடுங்க வாறவனைத்தான் அது கடித்து வைக்கும். அதை எங்கட தாத்தாஎங்கையோ இருந்து பிடித்து
வந்ததா அம்மா சொல்லுவா. தாத்தா இறந்த போது அந்த நாய் ஊளையிட்டு அழுததை நான் பார்த்திருக்கிறன்.

எண்பத்தி மூன்று கலவரத்தில ஆமி ரோட்டால போறவாற ஆக்களையெல்லாம் சுட்டபோது இது அவங்களைப்பாத்து பேய்தனமா குரைக்கும். அவங்கள் கோவத்தில கேட்டை காலால உதைச்சுட்டு போயிருக்கிறாங்கள். அப்ப பயத்தில ஏனடா இந்த நாயை வளர்கிறம் என்று இருக்கும். அதற்குப்பிறகு அதற்கும் வயசாகிபோச்சு. ஒரு கட்டத்தில கண் தெரியாம போச்சு. ஒருநாள் இரவு எங்கட கிணத்தில விழுந்திட்டுது. பிறகு கறன்ட் இல்லாத நேரத்திலயும் விளக்கு வெளிச்சத்தில் வாளியைக்கட்டி அதை ஒரு மாதிரி அப்பா வெளிய எடுத்தார்.
அதற்க்குப்பிறகு அது கனகாலம் இருக்க இல்லை. காணாப்போட்டுது. அம்மா சொல்லுவா அது எங்கடவீட்டில செத்து எங்களுக்கு கஸ்டம் குடுக்கக்கூடாது என்று எங்கையோ போய் செத்துவிட்டதென்று. அதுக்குபிறகு நாய் இல்லாம கொஞ்சநாள் இருந்தம்.

பிறகு மாமா மீன்வாங்கப்போன இடத்தல ஒரு மண்ணிற நாய்க்குட்டி பிடிச்சு வந்தார். அது ஒரு பேய்பிடித்த நாய். இரவில எப்ப பாத்தாலும் வெற்றிடத்தைப்பாத்து குலைத்துக்கொண்டே இருக்கும். இரவில அதோட கரைச்சல் தாங்க முடியேல்லை என்று அம்மா மாமாக்கு பேசுவா. உண்மைதான் அப்ப எங்கட வீட்டைச் சுத்தி சுவரோ யன்னலோ இல்லை. அறைகள் மட்டுந்தான் அறுக்கையா இருக்கும் .விறாந்தையில தான் நாங்கள் படுத்திருப்பம். இந்த நாய் இரவில கேற்றில இருந்து குரைச்சுக்கொண்டு ஓடிவரும் பிறகு தாத்தாவின்ர மரக்கட்டில்ல பாஞ்சு ஏறிநின்று வயிரவர்கோயில் திசையில குரைக்கும். அம்மா சொல்லுவா வயிரவர் உலாவுறார் அதுதான் நாய் குரைக்கிறதென்று. இதால நான் ஒன்டுக்குபோகக்கூட வீட்டுப்படியிங்க பயந்திருக்கிறன். அப்படிப்போனாலும் நாய் குரைக்கிற பக்கம் பாக்காம ஒடி வந்து வீட்டுக்கை ஏறிடுவன்.

ஒரு நாள் நாய் பிடிக்கிறவங்கள் வந்தாங்கள். முதலே தெரிஞ்சதால எங்கட நாயை உள்ளை விட்டு கேட்டை பூட்டிட்டு நாங்கள் கேட்டில ஏறி விடுப்புப்பாத்துக்கொண்டு இருந்தம். கேற்றுக்கு அடில இருந்த ஓட்டைக்குள்ளால வெளியபோன எங்கட நாய்; அவனைப்பார்த்து வீரங்காட்டி குரைக்;க அவன் சுருக்கைப்போட்டு பிச்சு வண்டிலுக்கை போட்டுட்டான். பிறகு நான் ஓடிப்போய் அப்பாவைக்கெஞ்சி அப்பா ஒரு ஐந்து ரூவா குடுத்து விடுவிச்சார். பிறகு
அந்த நாய் வலிப்பு வந்து செத்துப்போயிட்டுது. அந்த நிறம் ராசி இல்லை என்று அம்மா சொன்னா.

அதுக்குப்பிறகும் அதே நிறத்தில வந்தது ஒன்றும் நிலைக்க இல்லை.

கனகாலத்துக்குப்பிறகு கறுப்பும் வெள்ளையும் நிறத்தில புதிசா ஒரு நாய்குட்டி அப்பா யாரிட்டையோ வாங்கி வந்தார். அதுதான் எங்கட கடைசி உஞ்சு. அது வளர்ந்து ரோட்டில யாரையும் போக விடாது. டுட்டரிக்கு போற பெடியங்கள் எல்லாம் காலதூக்கிகொண்டுதான் சைக்கிள்ள போவாங்கள். எப்படியாவது றோட்டுக்குப்போயிடுற அதை துரத்திப்பிடிச்சு உள்ள விடுறது ஒரு நாளைக்கு இரண்டு மூன்டுதரம் நடக்கும். வீட்டுக்கு வாறவையை
நாயிட்டையிருந்து காப்பாத்த அதை பிடிச்சு அமத்தி வைச்சிருக்கிறதும் அது நாங்கள் விடுப்புபார்க்க ஓடிப்போய் கடிக்கபோறதும் சாதாரணம்.

இந்தியன் ஆமி காலத்திலயும் அது மோப்பம் பிடிச்சு ஆமி காம்பிலயிருந்து நடக்க வெளிக்கிடவே குரைக்க ஆரம்பிச்சிடும். கடைசியா நாங்கள் இந்தியாக்கு வெளிக்கிடேக்கை அதுக்கு விளங்கியிருக்காது. ஏதோ இடம் பெயர்ந்துதான் போகினம் அடிக்கடி வந்து சாப்பாடு வைப்பினம் என்டு நினைச்சு ஏமாந்துதான் போயிருக்கும்

Sunday, July 29, 2007

சைக்கிள்


ஒவ்வொருத்தரும் மோட்டசைக்கிள் கார் என்று வாங்கின உடன சைக்கிள மறந்திட்டம.; ஆனா ஒரு காலத்தில
சைக்கிள் பெரிய விடயமா இருந்தது. அப்ப நாங்கள் பள்ளிக்கூடம் போற வயசு. சில பணக்காரப்பெடியங்கள்

சைக்கிள்ளை வருவாங்கள். நாங்கள் எல்லாம் வெயில தேஞ்ச செருப்போட நடந்து வருவம். அவ்வப்போது
அப்பாவிடம் குட்டிச்சைக்கிள் வாங்கித்தரச்சொல்லிக்கேப்பம��
. அவரும் இந்தா அந்தா என்று எங்களை நல்லா
ஏமாத்துவார்.


அப்ப "சொப்பர்" சைக்கிளுக்குத்தான் நல்ல மரியாதை. அதுக்கு முன் சில்லு சின்னன். பின் சில்லு பெரிசு. முன்னால ஒரு சின்னக் கூடை இருக்கும். வேகத்தை மாற்ற கியர் கூட இருக்கும். சீட் மற்ற சீட் போல இல்லை சைக்கிள் ஓடுறவவை பின் பக்கம் சாயக்கூடிய மாதிரி இருக்கும். அந்தச் சைக்கிள் ஓடுற பெடியள் பெட்டையளை எல்லாம் ஏக்கமா பாப்பம். வாழ்நாளில ஒருக்கா அதை ஓட வேண்டும் என்று சரியான ஆசை. ஆனா அது கடைசிவரை நிறைவேற வில்லை.

பிறகு ஒரு சைக்கிள் வந்தது அது "பறக்கும் புறா" அதுகும் நல்ல வடிவான சைக்கிள். வெள்ளை நிறம். நல்லூர்த்திருவிழாக்காலத்தி��
நல்லூர் கல்யாண மண்டபத்தில அதை லொத்தர்ல போடுவார்கள். கடைசி நாள்
தான் குலுக்கல். ஒரு ரூபா டிக்கெட் வாங்கிட்டு தினமும் கோவில் போகேக்கையும் வரேக்கையும்
அதைப்பாத்துக்கொண்டு நிப்பம். முருகனிட்டை அது எங்களுக்கு விளவேண்டும்என்று கந்தஸஷ்டி கூட படிச்ச
ஞாபகம். ஆனா எங்களுக்கு முருகன் கடைசி வரை கண்திறக்க வில்லை.

யாழ்ப்பாணம் டவுனுக்குப்போனா சைக்கிள் விக்கிற கடையள் கஸ்தூரியார் ரோட்டில இருக்கும். ஒவ்வொன்றா தொட்டு விலை கேட்டுபோட்டுதான் வருவம்.

எங்கடை அப்பாட்டை ஒரு பழைய ரலி சைக்கிள இருந்தது அதை அப்பா மத்தியானம் சாப்பிட வாற நேரத்தில
எடுத்து ஓடுவம். சிலவேளை விழுத்தி காண்டிலை நெளிச்சு வைப்பம் இல்லை என்றா செயின் கவரை நெளிச்சு
வைப்பம். அப்பா வந்து அவசரமா சைக்கிள எடுக்கேக்கை செயின் களன்றிருக்கும் காண்டில் நெளிஞ்சிருக்கும்.
கோவத்தில அப்பா பேசுவார்.

சைக்கிள் பெரிசா இருக்கிறதால பாறுக்கால காலைவிட்டுதான் ஓடுவம். சில சின்னன்கள் முழுசா பெடல் போட கால்
எட்டாம பாதி மட்டும் உளக்குவினம். ஒருகை சீட்டை பிடிச்சு இருக்கும் ஒரு கை காண்டில பிடிச்சு இருக்கும்.
முன்னால வாறவை எல்லாம் பயப்பிடுவினம். பாறுக்கால காலைவிட்டு ஓட்டி ஒரு கிழமை கழிச்சுத்தான் பாறுக்கு
மேலால காலைவிட்டு ஓட்டுவம். சீட்டில இருந்தா பெடல் காலுக்கு எட்டாது. கால் வலிச்சா பார்ல இருப்பம் இல்லை
எண்டா நல்லா வேகமா ஓடிட்டு சீட்டில இருப்பம். அவசரத்துக்கு நிறுத்த முடியாது வேலில போய் மோதி விழுவம். முள்ளுக்கம்பி வேலி இல்லை என்டா கள்ளிச்சொடிப்பத்தைல விழுந்தா அவ்வளவுதான். இதுல நாய் துரத்தினா சொல்லவேண்டாம்.

வீட்டுக்கு கிட்ட இருந்த ஒரு சைக்கிள் கடையில சின்னச்சைக்கிள் வாடைக்கு குடுப்பார்கள். ஒரு மணித்தியாலத்தி;ற்கு ஒரு ரூபாதான். ஆனா அதை எடுத்து ஓட்டுவது பெரிய விசயம். தனியாப்போனக் குடுக்க மாட்டாங்கள். அப்பாவை இதுக்காக கூட்டிட்டுப்போக வேண்டும்;. இரண்டு தடவைதான் ஓட்டியிருப்பன்.

பிறகு எங்கடை உறவினர் ஒருவர் வெளிநாடு போக முயற்சிச்சார். அவர் தன்னோட சைக்கிளை எனககுத்தந்தார்.
அது அவரொட அப்பா பயன்படுத்திய ராலி சைக்கிள். இரும்பு கலர்லதான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா காசு
சேத்து ஒவ்வொன்றா திருத்தினன். என்ட கஸ்ட காலம் அவர் அடிக்கடி கொழும்பு வைரக்கும் போட்டு திரும்பிடுவார். ஒவ்வோருக்காவும் வந்து வாங்கிட்டுப்போயிடுவார். இருந்தாலும் நான் மண் எண்ணையில கலந்து கறுப்புப்பெயிண்ட்
அடிச்சு, சீட் கவர் போட்டு, முன் சில்லுக்கும் பின் சில்லுக்கும் கலர்ப்புூ போட்டு வைத்திருந்தன். முன்பக்க பாறுக்கு வயர் சுற்றி வடிவா இருந்தது. பிறகு அவர் ஒருமாதிரி வெளிநாடு போய்சேர அந்தச்சைக்கிள் என்ர கைக்கு முழுசா வந்து சேர்ந்துது.

அதுக்குப்பிறகு எப்பவும் அந்தச்சைக்கிள் கூட வரும். வீட்டுக்கையும் சைக்கிள் ஓடுறன் என்று அம்மா பேசுவா. அதை அலங்கரிச்சு துடைச்சுக்கழுவி அதோடைதான் வாழ்க்கை போச்சு. எத்தனையோ முறை இடம்பெயரேக்கையும் அதில தான் போவம். சிலவேளைகளில் அம்மாவை முன்னுக்கும் அக்காவைப் பின்னுக்கும் வைத்துக் கூட்டிட்டுப்போவன். எப்பவும் ஒரு காத்துப்;பம்பையும் எடுத்துட்டுப்போவம். டயர் தேஞ்சு போன காலத்தில ரெண்டு ரயர் போட்டு அதை ஓடியிருக்கிறன்.

நான் இந்தியாவிற்கு அகதியா போகேக்கை அதை வாங்கி ஓட அங்கை யாருமே இல்லை. எங்கடை வீட்டில
என்னோட அறையில விட்டுட்டு போயிட்டன். பதினஞ்சு வருசத்திற்குப்பிறகு அப்பாவும் அம்மாவும் வீட்டைப்பாக்கப்போனவை. டெலிபோன்ல கதைக்கேக்கை அம்;;;;மா சொன்னா செல் விழுந்து அந்தச்சைக்கிள் நசிஞ்சு
போயிருக்க வேண்டுமாம். பின்னால உடைஞ்ச சாமான்களோட அதுகும் கறல்கட்டிக்கிடக்;கிதாம்.

Saturday, December 04, 2004

ஒரு நாடுதேடி

2

எல்லோரும் தங்கள் பைகளை
தேவாலயத்தில் இடம்பிடித்து வைத்துவிட்டு
வெளியேவந்திருந்தார்கள்

நேரம் ஆக ஆக பசி எடுக்க ஆரம்பித்தது
இரவு சாப்பிடாதது
அப்போதுதான் ஞாபகத்தில் வந்தது
அது இன்னும் பசியை அதிகரித்தது

குளிப்பதற்கு தூரத்தில்
ஒரு கிணறு உள்ளதாச்சொன்னார் பெரியவர்
அங்கு போய்ப்பார்த்த போதுதான்
தெரிந்தது அது ஒரு சிறிய குளி
சுற்றிலும் கரும்பச்சை நிறத்தில்
முருகக்கற்கள்
ஓன்றரை முளம்தான் ஆழம் இருக்கும்

நாங்கள் போன போது
ஒரு சிறுமி குளித்துக்கொண்டிருந்தாள்
எங்களைக்கண்டு வெட்கத்தில்
வேகமாக குளித்துவிட்டாள்
வாளி வேண்டுமா அண்ணா என்று
அன்பாகக்கோட்டு வாளியைக்கொடுத்துவிட்டு
நடக்க ஆரம்பித்துவிட்டாள்
அவளது வீடு தீவின்
அடுத்த பக்கம் இருந்தது...

அது ஒரு பால்மா ரின்
நீலநிற நைலோன் கயிறு கட்டியிருந்தது

ஆசையாக அனைவரும் குளித்தோம்
தண்ணீர் கொஞ்சம் உப்புத்தான்
ஆனாலும் இதமாக இருந்தது
புதுத்தெம்பு கிடைத்தது
அது விரைவில் பசியை கிளறிவிட்டது

அனைவரும் குளித்து முடிப்பதற்குள்
சாப்பிட ஏதும் ஏற்பாடு செய்தால் நன்றாயிருக்கும்
மீண்டும் பெரியவர் முன்போய் நின்றோம்....

அவர் காலை உணவாக புட்டும்
மீன் குளம்பும்
ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்

எத்தனைபேர் என்று கணககெடுத்து
சொன்னோம்

நான்கு குடும்பம் வந்திருந்தது
அதில் ஒரு குடும்பம்
ஒருமாதக் கைக்குழந்தையுடன் வந்திருந்தது

மாதாகோயில் முன்பு உள்ள
மணல்வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்

ஓருவர் லொறி ஓட்டுனர்
ஒருவர் விவசாயி
ஒருவர் கடைவைத்திருந்தவர்....
ஒருவர் வெளிநாடுபோய்வந்தவர்...

அவர் கழுத்தில் இரண்டுவடம்
சங்கிலி தொங்கியது...
அவரது நடையுடைபாவனை
வித்தியாசமாக இருந்தது...
பேச்சுக்கூட அப்படித்தான்....
தனது வெளிநாட்டு வீரசாகங்களை
அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்...

அவர் தனது அண்ணியை
அழைத்துப்போக வந்தவராம்..
இடையில்
மாட்டிவிட்டேன் என்று
வெறுப்பாகச்சொன்னார்

கொஞ்சநேரத்தில் புட்டுவாசனை
எம் நாசியைத்துளைத்து
பசியை தூண்டிவிட்டது..

ஏதோ மந்திரம் செய்ததுபோல
நாம் மெது மெதுவாக
அந்தப்பெரியவர் வீட்டருகே வந்துவிட்டோம்...

அவர் எமது பசியை
உணர்ந்துகொண்டவராக
"குழம்பு வைச்சா சரி" என்று
எம் பசியைச் சமாதானம் செய்தார்...

அவர்பேச்சு
கொஞ்சம் இதமாக இருந்தது
அங்கேயே அமர்ந்துகொண்டோம்

சிலர் கைகாவலாக
பிஸ்கட் எடுத்து வந்திருந்தார்கள் போலும்
குழந்தைகள் எல்லாம்
பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்தன

என்னும் சிறிது நாட்கள்
போயிருந்தால் இந்த பிஸ்கட்
கூட வாங்க முடியாத நிலை
வந்திருக்கும்.....

பிரட் கண்ணில் கிடைக்காமல்
போய்விட்டது

வீட்டில் நெல்மூட்டைகள் இருந்ததால்
சாப்பாட்டுக்கஸ்டம் வரவில்லை
மற்றவர்கள் அரிசிக்கு கடைகளில்
வரிசையில் நிக்கும் போது
நாம் கொஞ்சம் புண்ணியம்
செய்;ததாகத் தோன்றும்....