Saturday, March 27, 2010


கோட்லஸ் மாமி

சந்தைக்குபோட்டு வீடடை வரேக்கை நேரம்போனதால மொபைல் மாமி வீட்டுவழியால போகவேண்டியதாப்போயிற்று. மாமி வெயில் எறிச்சபடியா வீPட்டுமுத்தத்தில இருக்கிற

சினன பூந்தோட்டத்தில நின்றா. நான் வந்தது வேறை கார் என்றாலும் யாரிது எஙகடை ஆள் என்று கட்டாயம் பாத்து இருப்பா. அவை வீட்டு வாசல்ல ஒரு ஸபீட் பிறேக்

இருக்கு. அதால சிலோ பண்ணவேண்டியதாப்போச்சு. இப்பவே லோக்கல்ல இருக்கிற சொந்தங்களுக்கு ஏன் தெரிந்தவர்களுக்கும் என்னைக்கண்ட செய்தி போயிருக்கும்.

மாமி எப்பவும் கோட்லஸ் போனோடை தான் இருப்பா. ஒன்று மாறி ஒன்று என்று இங்கை இருக்கிற ஆக்களுக்கு போன் பண்ணி கதைத்துக்கொண்டு இருப்பா. அதோடை

வெளிநாட்டுக்கும் காட்ல போன்பண்ணி கதைச்சு இங்கத்தையான் செய்திகளை அங்க தொகுத்து வழங்குவா.

எங்கட சொந்ததில மாமி ஒரு முக்கியமான புள்ளிதான். அவ எண்பதுகளில சொத்தெல்லாம் வித்திட்டு புத்திசாலித்தனமா வெளிநாடு வந்திட்டா. இங்கை அவவிற்கு

பிள்ளைகள் இருந்தும் இல்லாததுபோலதான். மாமின்ர ஆய்கின தாங்காம அதுகள் கோவிச்சுகொண்டு தள்ளி தள்ளி வீடு வாங்கி போய் தப்பிட்டுதுகள்;. மாமியும்

மாமாவுந்தான் தனியா இருக்கினம். மாமா மாமிக்கு எதிர்மாறு. அப்பாவி. வீட்டில அவற்றை சொல் எடுபடாது. எல்லாம் மாமிதான்.

இங்கை இருக்கிற எங்கட சொந்தங்களின்ர இரகசியங்களையெல்லாம் மாமி எப்படியோ செய்தியா சேகரித்து மற்றவர்;களுக்கு சுவையா தொகுத்து வழங்குவா. யார் யார்

யார் யாரோடை கோவம் என்று தெரிஞ்சு அவையோட கதையப்போட்டு கதைய எடுத்திடுவா. மாமி கேள்விகேட்டு கதைபிடுங்கிறதில கொட்டிக்காரி. மாமின்ர வீட்டுக்கு

போகேக்கை தெரிந்த இரகசியங்களை சொல்லக்கூடாது என்டு முடிவெடுத்திட்டு;ப்போனாலும் கடைசில மாமிட்டை சொல்லிப்போட்டுத்தான் வரவேண்டியிருக்கும். கதைகளை

வெளிய எடுக்கிறபோது மாமி ஏதும் சாப்பிட சொல்லி தந்து தான் அன்பா இருக்கிறதா நம்பிக்கையை ஏற்படுத்திடுவா. அதுக்காக மாமி மிக்ஸர் அது இது என்று

வைத்திருப்பா. மாமின்ர திறமைகளைப்பார்த்து நாங்கள் நிறையத்தடவை மாமி ஊர்ரில புலனாய்வுத்துறையில இல்லாட்டி உளவுத்துறையில இருந்திருந்தா இயக்கத்திற்கு

பெரிய உதவியா இருந்திருக்கும் என்று நினைச்சதுண்டு.

மாமிய எதிர்த்தா கரச்சல்தான். சின்னச்சின்னதா சதித்திட்டம் தீட்டி ஆக்களை உண்டு இல்லையென்டு செய்திடுவா. அப்படி சிலபேர் வேற வேற ஊர்களுக்கு போய்

தனித்தனியா சீவிக்கினம். மாமிக்கு ஆள் பலமும் இருக்கு. அது வேறையாருமில்லை மாமி மூலமா தங்கட கோவக்காரர்ட ரகசிய கதைகளை தெரிந்;து கொள்ளுற

ஆக்கள் தான். அவையள மாமி புத்திசாலித்தனமா தன்ர கட்டுக்குள்ளை வைச்சிருப்பா. மாமி அவையள வரவேற்கேக்கை கட்டிப்பிடித்து கொஞ்சித்தான் வரவேற்பா. அதால

அவர்கள் அவவிற்கு எதிரா கதைக்கவோ ஏதும் செய்யவோ முடியாமல்போயிடும்.

அந்தக்காலத்தில ஊருல செய்யிறதுபோல மாமி இப்பவும் கம்பீரமா நிண்டு இங்கை புதுசா வந்த வேலையில்லாத அப்பாவி ஆக்களை வைச்சு வீட்டுவேலை

தோட்டவேலை என்று எல்லாம் கொஞ்சக்காசு கொடுத்து செய்துபோடுவா. இப்படித்தான் நானும் வந்த புதிசில அவவீட்டை முறிஞ்சு முறிஞ்சு புல்லுவெட்டி தோட்டவேலை

செய்தன். அப்ப மாமி அன்பா கதைச்சு கதைச்சு என்னோட கதைகளை எல்லாம் எடுத்து ;காட்டிஸ்கில ஸ்டோர் பண்ணி பக்கப்பும் எடுத்து வைச்சிட்டா. அப்படியெடுத்த

இரகசியங்கள் தான் இரண்டு வருடும் கழிச்சு எனக்கு எதிரா அவவிற்கு பயன்பட்டது. அப்ப எனக்கு வேலைகிடைச்சதால கொஞ்சம் கொஞ்சமா அவவிற்கு வேலை செய்றத

குறைச்சிட்டன். அதில அவவிற்கு கோவம். கூப்பிட்டோடை ஓடிவரவிலலை என்ற கோவத்தில எனக்கெதிரா சின்ன சின்னதா சதித்திட்டம் போட்டு செயற்படுத்தினா.

அதனால நிறைய கஸ்டங்களை அனுபவிக்கவேண்டியதாபோச்சு. அதில ஒன்டு நட்பா இருந்த பல உறவுகளை மாமி எனக்கெதிரா மாத்திவிட்டுட்டா. காசு குடுத்தாத்தான்

அவன் வீட்டுக்கே வருவான் வேலையேதும்செய்தா உடனை காசு எதிர்பார்க்கிறான் என்று செய்திபரப்பி சைச்சிருக்கிறா.

அதோட எனக்கு பேசிவந்த கல்யாணங்கள் பல குழம்பிப்போறதுக்கு மாமி தான் காரணம் என்று எனது மற்ற சொந்தங்கள் சொல்லுகினம். இனி அப்படி நடக்காம இருக்க

அடிக்கடி மாமியைபோய் பார்த்து அனுசரித்து நடக்கசொல்லி அறிவுரையும் சொல்லுகினம். இருந்தாலும் எனக்கு திரும்பிப்போய் மாமியை அரவணைத்து

நடக்கவிருப்பமில்லை. அது பிரச்சனையத்தான் தரும் என்று நம்பிறன். கொஞ்சநாள் மாமியால ஒண்டும் பிரச்சனை வர இல்லை. மாமி என்னை மறந்து

இருப்பாவோதெரியாது. ஆனால் இன்டைக்கு அந்தப்பக்கத்தால மாமிக்கு முன்னால தெரியாத மாதிரிபோனது கட்டாயம் ஏதும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்றது நான் நினைச்சது சரிதான்.

வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்தில சீட்டுக்கார சிற்றம்பலம் கதவைத்தட்டினார். சிற்றம்பலத்தார் இங்கை வெளிநாட்டில சீட்டுப்போடுற ஆள். நியாயமான மனிசன்தான் ஆனா

சரியான கறார்பேர்வழி. இப்ப என்னசெய்யிறது என்டு விளங்கவில்;லை. நான் குடுக்கவேண்டிய காசில கொஞ்சம் குறையுது. இனி சம்பளம் வரத்தான் குடுக்கலாம். என்ர கார்

பழுதாப்போனதில அதைவித்துட்டு கொஞ்சம் காசு போட்டு கொஞ்சம் பழைய காரா வாங்கினன் அதனால அந்த தேதிக்கு சிற்றம்பலத்தாருக்கு காசு குடுக்கமுடியாமல்

போச்சு. அதனால இந்தாள் போன் கூடப்பண்ணாமல் வந்து நிக்குது.

கதவைத்திறந்து "மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணை அடுத்த கிழமை நானே கொண்டுவந்து தாறன்"

என்று சொன்னன்.

அதுக்கு அவர் "என்ன புதுசா கார் வாங்கியிருக்கிறீராம் சீட்டுக்காசை அந்ததேதிக்கு குடுக்கதெரியஇல்லை என்ன மனிசனப்பா நீர்".
வெக்கமாப்போச்சு எனக்கு.

"சரி நான் வாறன். இங்கையெண்டு வரேல்லை. மார்க்கண்டு மாமிதான் சொன்னா இப்பதான் ஆள் போகுது வீட்டைபோனாப்பிடிக்கலாம்" என்று சிற்றபம்பலத்தார்

சொல்லிவிட்டு தன்ர காரை எடுத்துக்கொண்டு பொயிட்டார். மார்க்கண்டு மாமி வேறையாரும் இல்லை கோட்லஸ்; மாமியேதான். மாமி தன்ர வேலைய காட்டதொடங்கீட்டா.

சீட்டுக்கார சிற்றம்பலத்தார தூண்டி அனுப்பிவிட்டது மாமிதான். இனி கனடா லண்டன் யாழ்ப்பாணம் பிரான்ஸ் சுவிஸ் எல்லாம் நான் கார்வாங்கினதை நியுஸில

காட்டியிருப்பாங்கள். நான் சொல்லுறது மாமின்ட சற்றலைட் டீவியை.

1 Comments:

Blogger Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

July 19, 2010 at 1:15 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home