Saturday, December 04, 2004

ஒரு நாடுதேடி

2

எல்லோரும் தங்கள் பைகளை
தேவாலயத்தில் இடம்பிடித்து வைத்துவிட்டு
வெளியேவந்திருந்தார்கள்

நேரம் ஆக ஆக பசி எடுக்க ஆரம்பித்தது
இரவு சாப்பிடாதது
அப்போதுதான் ஞாபகத்தில் வந்தது
அது இன்னும் பசியை அதிகரித்தது

குளிப்பதற்கு தூரத்தில்
ஒரு கிணறு உள்ளதாச்சொன்னார் பெரியவர்
அங்கு போய்ப்பார்த்த போதுதான்
தெரிந்தது அது ஒரு சிறிய குளி
சுற்றிலும் கரும்பச்சை நிறத்தில்
முருகக்கற்கள்
ஓன்றரை முளம்தான் ஆழம் இருக்கும்

நாங்கள் போன போது
ஒரு சிறுமி குளித்துக்கொண்டிருந்தாள்
எங்களைக்கண்டு வெட்கத்தில்
வேகமாக குளித்துவிட்டாள்
வாளி வேண்டுமா அண்ணா என்று
அன்பாகக்கோட்டு வாளியைக்கொடுத்துவிட்டு
நடக்க ஆரம்பித்துவிட்டாள்
அவளது வீடு தீவின்
அடுத்த பக்கம் இருந்தது...

அது ஒரு பால்மா ரின்
நீலநிற நைலோன் கயிறு கட்டியிருந்தது

ஆசையாக அனைவரும் குளித்தோம்
தண்ணீர் கொஞ்சம் உப்புத்தான்
ஆனாலும் இதமாக இருந்தது
புதுத்தெம்பு கிடைத்தது
அது விரைவில் பசியை கிளறிவிட்டது

அனைவரும் குளித்து முடிப்பதற்குள்
சாப்பிட ஏதும் ஏற்பாடு செய்தால் நன்றாயிருக்கும்
மீண்டும் பெரியவர் முன்போய் நின்றோம்....

அவர் காலை உணவாக புட்டும்
மீன் குளம்பும்
ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்

எத்தனைபேர் என்று கணககெடுத்து
சொன்னோம்

நான்கு குடும்பம் வந்திருந்தது
அதில் ஒரு குடும்பம்
ஒருமாதக் கைக்குழந்தையுடன் வந்திருந்தது

மாதாகோயில் முன்பு உள்ள
மணல்வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்

ஓருவர் லொறி ஓட்டுனர்
ஒருவர் விவசாயி
ஒருவர் கடைவைத்திருந்தவர்....
ஒருவர் வெளிநாடுபோய்வந்தவர்...

அவர் கழுத்தில் இரண்டுவடம்
சங்கிலி தொங்கியது...
அவரது நடையுடைபாவனை
வித்தியாசமாக இருந்தது...
பேச்சுக்கூட அப்படித்தான்....
தனது வெளிநாட்டு வீரசாகங்களை
அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்...

அவர் தனது அண்ணியை
அழைத்துப்போக வந்தவராம்..
இடையில்
மாட்டிவிட்டேன் என்று
வெறுப்பாகச்சொன்னார்

கொஞ்சநேரத்தில் புட்டுவாசனை
எம் நாசியைத்துளைத்து
பசியை தூண்டிவிட்டது..

ஏதோ மந்திரம் செய்ததுபோல
நாம் மெது மெதுவாக
அந்தப்பெரியவர் வீட்டருகே வந்துவிட்டோம்...

அவர் எமது பசியை
உணர்ந்துகொண்டவராக
"குழம்பு வைச்சா சரி" என்று
எம் பசியைச் சமாதானம் செய்தார்...

அவர்பேச்சு
கொஞ்சம் இதமாக இருந்தது
அங்கேயே அமர்ந்துகொண்டோம்

சிலர் கைகாவலாக
பிஸ்கட் எடுத்து வந்திருந்தார்கள் போலும்
குழந்தைகள் எல்லாம்
பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்தன

என்னும் சிறிது நாட்கள்
போயிருந்தால் இந்த பிஸ்கட்
கூட வாங்க முடியாத நிலை
வந்திருக்கும்.....

பிரட் கண்ணில் கிடைக்காமல்
போய்விட்டது

வீட்டில் நெல்மூட்டைகள் இருந்ததால்
சாப்பாட்டுக்கஸ்டம் வரவில்லை
மற்றவர்கள் அரிசிக்கு கடைகளில்
வரிசையில் நிக்கும் போது
நாம் கொஞ்சம் புண்ணியம்
செய்;ததாகத் தோன்றும்....