Sunday, October 24, 2004

ஏமாந்த என் காதல்

ஏமாந்த என் காதல்

என்றோ எழுதியகவிதை
பழையபாடப் புத்தக்த்தில்
முத்தாய் சிரித்தது
அன்றைய நினைவை அழைத்து வந்தது

பதினாறு வயதில்
பருவக்கோளாறில் அன்று கிறுக்கியது

மனதைத்தொட்டவளை
வர்ணித்து
இரவில் எழுதியது
இன்று சிரிக்கிறது
இதயம் கனக்கிறது

அது ஏமாற்றத்தின் எதிரொலிதான்
அழி;ந்துவிட்ட நினைவுகளை
மீட்டுவந்துவிட்டது

இல்லை

மறைத்துவைத்த நினைவுகளை
வெளிச்;சம் போட்டுவிட்டது

கண்களில் கண்ணீர்

.........ஆனாலும்
கவிதையின் நயம்
என்னை மெய்சிலிர்க்க வைத்தது

மகிழ்ந்தேன்.....

என் எழுத்துக்கு தனி அழகு கொடுத்த
அந்தக் காதலை எண்ணி.......

1 Comments:

Blogger Anbae said...

really amazing ...i never expected such tamilblogs could be...so good of u.very nice poems.wish u good luck and make more with efforts

November 27, 2005 at 10:09 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home